பழனியில் புதிதாக குடும்ப வழங்கும் விழா

பழனி நெய்க்காரப்பட்டி ஆயக்குடி பாலசமுத்திரம் பாப்பம்பட்டி கலையம் புத்தூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 600 க்கும் மேற்பட்டோர் புதிதாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்திருந்தனர். விண்ணப்பம் செய்து 50 நாட்களுக்குள் தற்போது முதல் கட்டமாக இருநூறு பேருக்கு புதிதாக குடும்ப அட்டைகள் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. 

விண்ணப்பம் செய்த மற்றவர்களுக்கு விரைவில் குடும்ப அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் அட்டைகள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவித்தபடி விண்ணப்பித்தவர்களுக்கு குறுகிய காலத்திற்குள் குடும்ப அட்டை வழங்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்

தொடர்புடைய செய்தி