திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் அழகு குத்தியும் காவடி எடுத்து ஆடியும் மொட்டை எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். இன்று (ஜனவரி 28) (ஜனவரி 28)புதுக்கோட்டை மாவட்டம் வத்தலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 20 அடி நீளம் அழகு குத்தி உடல் முழுவதும் சந்தனம் பூசி கிரி வீதியில் பரவசத்துடன் ஆடி வந்தார்.