வெள்ளைய கவுண்டன் வலசு, கீரனூர் ஆகிய வழித்தடத்தில் செல்லக்கூடிய அரசு பேருந்துகளில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பேருந்துகள் செல்லும் என்பதால் அப்பகுதிக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
பழனி பகுதியில் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பதும், முன் சக்கரங்கள் கழன்று ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அரசு பேருந்துகளில் முறையான பராமரிப்பு பணிகள் அவ்வபோது மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.