பழனி அருகே கஞ்சா விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக தண்டபாணி (75), அவரது மனைவி கண்ணியம்மாள் (65), முத்து (27), தங்கப்பாண்டி (25) ஆகிய 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி