பழனி காவல் நிலைய போலீசார் காரைமடையை அடுத்த நீர்மட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்பனை செய்த முருகானந்தம், ஹரிஹரன், பிரவீன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, ஒரு டூவீலர் மற்றும் மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.