பழனி: 2 போலீசார் இடைநீக்கம்; காவலர் பணி நீக்கம்

பழனி அருகே சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் விபத்து வழக்கில் பணம் பெற்றதாக எழுந்த புகாரில், சிறப்புச் சார்பு ஆய்வாளர் ராஜு மற்றும் பெண் முதன்மைக் காவலர் சுதா ராணி ஆகியோரை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதாக கூறப்படுகிறது. மேலும், ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட முதல் நிலை காவலர் மணிகண்டனை பணியிலிருந்து நீக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி