திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் தீச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பழனி செங்குந்த முதலியார் பரிபாலன சங்கம் சார்பில் 108 பால்குட ஊர்வலம் அடிவாரத்தில் இருந்து நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.