தாடிக்கொம்பு அருகே கஞ்சா விற்பனை.. இளைஞர் கைது

திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சங்கர் உத்தரவின் பேரில், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் காவல்துறையினர் சரளப்பட்டி, பத்மாநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா விற்பனை செய்த ஹரிஹரசுதன் (27) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி