வத்தலகுண்டு: மாணவர்களை கடத்திச் செல்வதாக ஆசிரியர்கள் புகார்

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பழைய வத்தலகுண்டு பொன்னர் தமிழரசி மகன் சஞ்சித் மற்றும் சித்தார்த், டிரைவர் ரவி மகன் லோகேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய நான்கு சிறுவர்களை ஆம்னி வேன் மற்றும் இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் கடத்திச் செல்வதாக பரபரப்பு ஏற்பட்டது.

 பள்ளி மாணவர்களை ஆம்னி வேனில் மற்றும் இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்ல முயற்சி செய்ததாகவும், உடனடியாக கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் மாணவர்களை விட்டுவிட்டு தப்பி ஓடினதாக கூறினார்கள். இந்த சம்பவம் இப்பகுதியில் பரவலாக பரவியதால், உடனடியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் முன்பாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்த பள்ளி ஆசிரியர் முருகேஸ்வரி திடீரென மயக்கம் அடைந்தார்.

 இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இப்படியான சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவர்களை கடத்திச் செல்ல முயற்சித்தவர்கள் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி தலைமையில் சார்பாக மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி