பேரிஜம் வன பகுதிக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பேரிஜம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மதிகெட்டான் சோலை, பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் தடை சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி