தொப்பம்பட்டி: அரசு மேல்நிலை பள்ளியில் ஆங்கில நாள் விழா

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் 'ஆங்கில நாள்' விழா என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி, கீரனூர், முத்துநாயக்கன்பட்டி, மேல்கரைப்பட்டி, தாளையம், மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவிகள், தண்ணீர் சிக்கனமான பயன்பாடு குறித்தும் ஆங்கிலத்தில் உரையாடியும், சினிமாப் பாடல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடியும், பறவைகள் போல் வேடமிட்டும், மரம் வளர்ப்பதின் பயன்பாடு, மரத்தை அழித்தால் காற்றை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும் என்ற நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி