திண்டுக்கல்: விபத்தில் உயிரிழந்த காவலருக்கு ரூ. 1 கோடி விபத்து காப்பீடு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பணிபுரிந்து கடந்த 9-9-2025 அன்று சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் முனியாண்டி என்பவரின் குடும்பத்திற்கு, SBI வங்கியின் மூலம் வழங்கப்படும் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகையான ரூ. 1 கோடியை காவல் கண்காணிப்பாளர்/தளவாய், த. சி. கா. 14 ஆம் அணி பாண்டியராஜன் முன்னிலையில் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் SBI வங்கி முதன்மை மேலாளர்கள் பிரதீப் ராபின் ராஜ், கிருஷ்ண சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்தத் தகவல் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கிடைத்தது.

தொடர்புடைய செய்தி