ரெட்டியார்சத்திரம்: அடிப்படை வசதிகள் கேட்டு மனு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பொண்ணுமாந்தரை ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை வசதி, நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பொது மக்களுக்காக வழங்கப்பட்ட குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதை சீரமைத்து புதிய தொட்டி கட்டித் தர வேண்டும், அதேபோல் அப்பகுதியில் அமைக்கப்பட்ட பைப்லைன்களை புதுப்பித்து தருமாறு பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். 

ஆனால் ஊராட்சி செயலாளர் கேசவன் எப்போதும் மது போதையில் உள்ளதால் தங்களுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தங்கள் பகுதிக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி