ஒட்டன்சத்திரம்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணிபுரிபவர் முத்துச்சாமி. ஒட்டன்சத்திரத்தை சொந்த ஊராக கொண்ட இவர் அதே ஊரில் பல ஆண்டுகளாக தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். அப்போதே முத்துச்சாமி அதிக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு புகார் சென்றது. 

இந்நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் நேற்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று ஒட்டன்சத்திரத்தில் உள்ள முத்துச்சாமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி