ஒட்டன்சத்திரம்: சட்ட விரோதமாக வெடி மருந்து விற்பனை

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரத்தில் செயல்படாமல் இருந்த ரிச்சி கார் சர்வீஸ் குடோனை ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஷாஜகான் மற்றும் அப்துல் ஹக்கீம் ஆகியோர் வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக மூலனூரில் இருந்து ஜெலட்டின் வெடிமருந்துகளை பாறைகள் உடைப்பதற்காகவும், கிணறு வெட்டுவதற்கும் கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (19.12.2024) அதிகாலை வெடிமருந்து உராய்வு ஏற்பட்டு பயங்கரமாக வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் இச்சம்பவம் சம்பந்தமாக ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்று இவர்களுக்கு வெடிமருந்து வழங்கிய முக்கிய குற்றவாளியான மூலனூரைச் சேர்ந்த ருக்குமணி வெடிமருந்து விற்பனையாளர் குமார்வடிவேல் மற்றும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஷாஜகான், அப்துல் ஹகீம் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூலனூர் ருக்குமணி வெடிமருந்து நிறுவனத்தைச் சேர்ந்த காளிமுத்து ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ரியாஸ் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி