திண்டுக்கல்: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது பள்ளி சிறுமிகளுக்கு கடந்த 2023-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்து மிரட்டியதாக ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் முருகன் (54) என்பவரை போக்சோவில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள், முருகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2,02,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி