ஒட்டன்சத்திரம்: முதியவர் தீக்குளிக்க முயற்சி

ஒட்டன்சத்திரம் கேவிபி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 73) முதியவர் வளாகத்தில் தன் உடலில் டீசலை ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் டீசல் வைத்திருந்த கேனை பிடுங்கி எறிந்து, தண்ணீர் ஊற்றி விட்டனர். 

பாலகிருஷ்ணன் முதியவர் கூறியபடி, ஒட்டன்சத்திரத்தில் பகுதியில் தற்போது அரசினர் மகளிர் கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் சுற்றுச்சூழல் எழுப்பியதில் தங்கள் நிலத்திற்குச் செல்லும் வண்டிப்பாதையில் 11 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நிலத்தை மீண்டும் வண்டிப்பாதைக்கு ஒப்படைக்க நீதிமன்றம் அறிவித்தும், நிலத்தை மீண்டும் கொடுக்காமல் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காதால் மனம் உடைந்த முதியவர் பாலகிருஷ்ணன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தன் உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார். 

அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள் டீசல் வைத்திருந்த கேனை பிடுங்கி எறிந்து தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார். அதைத் தொடர்ந்து பின்னர் அவர் தன் மனுவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் முதியவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி