ஒட்டன்சத்திரம்: சமையல்காரா் கொலை.. தொழிலாளி கைது

திண்டுக்கல் அருகேயுள்ள வேடபட்டியைச் சேர்ந்த மாயாண்டி மகன் பாலாஜி (39). சமையல்காரரான இவர் திங்கள்கிழமை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் அவரது உடலை கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, கொலையாளியைத் தேடி வந்தனர். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் பொருந்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், கொலையாளி திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுடலை முத்து என்ற சூர்யா (26) என்பதும், அவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. 

இதையடுத்து, திருப்பூரில் பதுங்கியிருந்த சுடலை முத்துவை போலீசார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் மது போதையில் படுத்திருந்த சுடலைமுத்துவிடம் சமையல்காரர் பாலாஜி தகாத முறையில் நடந்துகொண்டதால், அவரை பாலாஜி செங்கல்லால் தலையில் அடித்துக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி