இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். இதன்படி, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பீட்ரூட்டை மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் வரத்து அதிகமாக இருந்ததால் விலை சரிந்து கிலோ ரூ. 16க்கு விற்பனையானது. இந்நிலையில், தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவால் பீட்ரூட் விளைச்சல் பாதிக்கப்பட்டு தற்போது மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், பீட்ரூட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 43க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.