ஒட்டன்சத்திரம்: மின்னணு திரையை திறந்து வைத்த.. அமைச்சர்

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் வசதிக்காக இரண்டு மின்கல சிற்றுந்துகள் இயக்கத்தை இன்று (15.06.2025) தொடங்கி வைத்து, பூஜை விவரங்கள் குறித்த மின்னணு திரையை (LED DISPLAY BOARD) திறந்து வைத்தார். 

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் எளிதாக மின்இழுவை இரயில் நிலையம், படிப்பாதை, கம்பிவழி ஊர்தி நிலையம், சுற்றுலா பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு சிரமமின்றி செல்வதற்காக கிரிவீதியில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தலா 11 இருக்கைகள் கொண்ட மின்கல கார்கள் 17 எண்ணிக்கையிலும், தலா 23 இருக்கைகள் கொண்ட மின்கல மினி பேருந்து 10 எண்ணிக்கையிலும், டீசல் மினி பேருந்து 2 எண்ணிக்கையிலும் என ஆகமொத்தம் 29 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணை ஆணையர்/செயல் அலுவலர், துணை ஆணையர், உதவி ஆணையர், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி