1) திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர் மனுதாக்கலில் ஏன் மதிமுக சார்பில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு தலைவர் வைகோ அவர்களுக்கு கோவையில் திருமண நிகழ்ச்சி காரணமாகவும், தனக்கு ஒட்டன்சத்திரத்தில் முக்கிய நிர்வாகியின் திருமண நிகழ்ச்சி காரணமாகவும் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தார்.
2) 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி நீடிக்குமா என்பதற்கு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அவையில் இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர் அவையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் மக்கள் பணி தொடரும் எனவும், இருப்பினும் திமுகவின் மீது தொண்டர்களும் நிர்வாகிகளும் தலைமையும் மனவருத்தத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உடன் மதிமுகவின் மாவட்ட செயலாளர் செல்வராகவன், ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகன், மற்றும் தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.