இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தேவதத்தூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், கண்ணனூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதுதவிர கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த வியாபாரிகள் தங்களுக்கு தேவையான தக்காளியை உள்நாட்டில் கொள்முதல் செய்து வருகின்றனர். வரத்து அதிகரித்துள்ள நிலையில், வியாபாரிகளின் வரவு குறைந்துள்ளதால், தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ. 100 முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 50 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு