உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், போடுவார்பட்டி ஊராட்சி பள்ளிக்கூட வளாகத்தில், ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சஞ்சய்காந்தி, தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாஹிரா, குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.