ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான அர. சக்கரபாணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். சப்பலநாயக்கன்பட்டியில் உள்ள டீக்கடையில் தானே டீ தயாரித்து மக்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார். மகளிர் உரிமைத்தொகை, இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதாக தெரிவித்தார். 7வது முறையாக வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் திமுக மீண்டும் ஆட்சியமைந்தவுடன் பழனி தனி மாவட்டமாகும் என உறுதி அளித்தார்.