டெல்லி ஆட்சி தானே இருந்துட்டு போகட்டும்.. திண்டுக்கல் சீனிவாசன்

திமுகவைத் தவிர யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சியாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டு போகட்டும். பத்து ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில்தான் கேட்க வேண்டும். வேறு யாரிடம் கேட்க முடியும். மத்திய அரசாங்கத்திடம்தான் மாநில அரசாங்கம் கேட்க வேண்டும்" என்று கூறினார். மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசிடம் கேட்பது இயல்பானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி