திண்டுக்கல்: காட்டுமாடு தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே மணலூர் கெங்கப்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்ற செல்வம் (57) என்பவரை காட்டு மாடு தாக்கியதில் குடல் சரிந்து பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெரும்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி செல்வம் இன்று உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி