திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளின் சுவர்களில் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் சார்பாக திமுக கட்சியை கேள்வி கேட்கும் வகையில் அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசாக 5000 ரூபாய் கேட்ட ஸ்டாலின் அண்ணாச்சி பொங்கல் பணம் என்னாச்சு? பொங்கல் பரிசுக்கு பணம் இல்லையா? என்ன சாரே ஐயாயிரம் எங்க? என்று வாசகம் எழுதிய வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.