கொடைக்கானல் வட்டாரத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளான 11 நடுநிலைப் பள்ளிகள், 6 உயர்நிலைப்பள்ளிகள், 4 மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் வாசிப்புப் பயிற்சி அளிப்பதற்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாம் 11.06.2025 முதல் 14.06.2025 வரை கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து 14.06.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 'India Reads' இயக்கத்தை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் நரேஷ் அவர்கள் கலந்துகொள்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவரும் பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.