கொடைக்கானல்: நோய் தொற்று ஏற்படும் வகையில் கழிவுநீர் வடிகால்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அமைந்து வருகிறது. அதிக சுற்றுலாப் பயணிகள் வருடம் தோறும் குவிந்து வருகின்றனர். மேலும் கொடைக்கானல் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி சுற்றி பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் நிறைந்துள்ளது. 

இதனால் அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் சென்று வருவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியில் வாகனநிறுத்தம், சைக்கிள் சவாரி, படகு சவாரி, அம்மா உணவகம், தனியார் உணவகம் என சுற்றுலாப் பயணிகள் அதிகம் சென்று வரக்கூடிய நிலை இருந்து வருகிறது. அப்பகுதியில் கழிவுநீர் வடிகால் திறந்த நிலையில் உள்ளது. 

மேலும் பல மாதங்களாக கழிவுநீர் திறந்த நிலையில் இருப்பதால் துர்நாற்றம் வீசி நோய்தொற்று ஏற்படும் வகையில் உள்ளது. கொடைக்கானல் நகராட்சி சுற்றுலாப் பயணிகளின் மற்றும் உள்ளூர்வாசிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் கழிவுநீர் வாய்க்காலைச் சுத்தம் செய்து நோய்தொற்று வராமல் பாதுகாக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை எழுந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி