இருந்தபோதிலும் அவர்களுக்கு பணம் கட்டியதற்கான ரசீது மற்றும் வங்கியில் வரவு செலவு செய்ததற்கான புத்தகம் எதுவும் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் வாங்கிய கடனுக்கு மேலாக வட்டியுடன் சேர்த்து கூடுதலாக, அதாவது இரண்டு மடங்கு தொகையை அதிகாரிகள் கேட்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை இந்த கூட்டுறவுச் சங்கத்தில் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும், வாங்கிய கடன் தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து ஆத்திரமடைந்த கூக்கால் கிராமத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட விவசாய மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் அலுவலகம் முன்பாக அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
NDA கூட்டணியில் தவெக?.. மா.செ., ஆதரவுக்கு என்ன காரணம்?