திண்டுக்கல்: தலையில் கல்லைப் போட்டு கொலை

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகவேல் (50) இவர் துப்புரவு பணியாளர் ஆவார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கன் மகன் சசிகுமார் (35) என்பவர் முன்விரோதம் காரணமாக முருகவேல் மீது கல்லை எறிந்து தாக்கினார். இதில் முருகவேல் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் முருகவேலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சசிகுமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி