திண்டுக்கல்: தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், சுக்காம்பட்டி கிராமத்தில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: -தேவாங்குகளை பாதுகாக்கும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும், அவை விவசாயத்தில் வகிக்கும் முக்கியப் பங்கினை எடுத்துரைக்கும் விதமாக, திண்டுக்கல் வனக்கோட்டம், அய்யலூர் வனச்சரகம், சுக்காம்பட்டி கிராமத்தில் தேவாங்கு பாதுகாப்பு மையம் சுமார் 8.11 எக்டேர் பரப்பளவில் அமைத்திட ரூ.16.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மண்டல வனப்பாதுகாவலர் காஞ்சனா, திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி