கோபால்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகளுடன் நேற்று மாலை அரசு பஸ் சென்றது. திடீரென அரசு பஸ்ஸின் முன் பகுதியில் இருந்து ஒயர் கருகுவது போல் புகை வந்தது. இதனைக் கண்ட பயணிகள் பதட்டம் அடைந்தனர். இதனை அடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை விலக்கு ரோடு பகுதியில் நிறுத்தினார். இதனை அடுத்து பஸ்ஸில் பயணித்த பயணிகள் அந்த வழியாக சென்ற வேறு பஸ்சில் ஏறி சென்றனர். இதேபோல் திண்டுக்கல் இருந்து கோபால்பட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டிக்கு 40க்கு மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் வந்தது. திடீரென பஸ்சின் பின்புறம் வெடிச்சத்தம் கேட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து டிரைவரிடம் பஸ்சை நிறுத்துமாறு கூறினர். டிரைவர் பஸ்சை நிறுத்தி பார்த்தபோது பின்புற டயர்களில் ஒன்று வெடித்திருந்தது. இதனால் பஸ் நிறுத்தப்பட்டு சரி செய்யப்பட்ட நிலையில் சென்றது.