இங்கு தமிழக அரசு சார்பில் சிட்கோ அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. சிட்கோ அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாமல் போகும். அதன் மூலம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் சிட்கோ அமைப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளன. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் சிட்கோ அமைவதாக கூறப்படும் இடத்தை உயர்நீதிமன்றம் நீதிபதி சுவாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார். அரசு கூடுதல் வழக்கறிஞர் வீரகதிரவன், மாவட்ட கலெக்டர் பூங்கொடி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Good Morning Quotes Tamil