திண்டுக்கல் நெடுஞ்சாலை சத்திரப்பட்டி அருகே கோபால் நகரில் சாலையோரம் பொதுமக்கள் கொட்டியிருந்த குப்பையில் திடீரென தீப்பற்றியது. இதனால் புளியமரம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த பழனி தீயணைப்புப் படையினர் உடனடியாக தீயை அணைத்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.