திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் லாஸ்காட் சாலைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மோகன் (28), உணவகத்தின் கழிவறைக்குச் சென்றபோது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தார். சக பணியாளர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.