திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினர், நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி காட்டுப் பன்றிகளை வேட்டையாடியதாக முத்துவிஜயன், சிவா, கணேசன், செல்வராஜ் ஆகிய நால்வரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சிவா தப்பியோடியுள்ளார். இவர்களது வீடுகளில் சோதனை நடத்தியதில் 7 கிலோ நாட்டு வெடி மருந்துகள், 11 நாட்டு வெடி உருண்டைகள், வேட்டையாடிய காட்டுப் பன்றி இறைச்சி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மூவர் திண்டுக்கல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய சிவாவை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.