திண்டுக்கல்: வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - வீடியோ

வேடசந்தூர் அருகே உள்ள காளனம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் வயது 55 விவசாயி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் வேடசந்தூருக்கு வந்துவிட்டு மீண்டும் தனது ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தார். வேடசந்தூரை அடுத்த ரோஜா விலாஸ் தோட்டம் பகுதியில் சென்ற பொழுது எதிரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சென்ட்ரிங் வேலை பார்க்கும் அம்மாபட்டி புதூரை சேர்ந்த காளிதாஸ் வயது 22 ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. 

இதில் காளிதாசன் வாகனம் பறந்து சென்று காட்டுப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் விழுந்தது. கதிர்வேல் பலத்த காயம் அடைந்து வலது கால் உடைந்தது. மேலும் வலது கையின் சுண்டு விரல் கசங்கியது. அவ்வழியாகச் சென்ற அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கதிர்வேல் அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.

தொடர்புடைய செய்தி