திண்டுக்கல்: வருவாய்த் துறையினா் அளவீடும் பணி

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள வக்கம்பட்டியில் புனித மரியா மதலேனாள் தேவாலயம் உள்ளது. இந்தத் தேவாலயப் பகுதியில் உள்ள சில இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சிவசேனா மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடுத்தார். 

இதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில், ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன் தலைமையில், தேவாலயம் பகுதிகளில் அளவீடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளர் ஷர்மிளா, கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி. தெய்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி