புகாரின் அடிப்படையில் போலீசார் வட மாநிலம் சென்று குற்றவாளிகளை கைது செய்கின்றனர். அவ்வாறு மோசடி சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை கைது செய்யும் போது அவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் போது அவை அனைத்தும் மற்றொரு நபரின் வங்கி கணக்காக இருப்பது தெரியவந்தது. இவ்வாறு அப்பாவி மக்கள் அவ்வப்போது பணத்திற்காக வங்கி கணக்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை பகிர்வதனால் இவ்வாறான மோசடிகள் நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க யாருக்கும் வங்கி கணக்குகள், சிம் கார்டுகள், பெயர் முகவரி உள்ள ஆவணங்களை கொடுக்க வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?