திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர், மனுதாரர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் பல்வேறு தரப்பு மக்களும் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.