திண்டுக்கல்: மகனின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு தாயார் மனு

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா போதுபட்டி ஊராட்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் தனியார் முதியோர் இல்லத்தில் காப்பாளராக பணி செய்கிறார். இவரது கணவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகன் மட்டுமே இருந்துள்ளார். இவர் பழனி நெய்க்காரப்பட்டியில் ரேணுகாதேவி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த மாதம் இப்பள்ளியில் கணித ஆசிரியர் சரவணப் பெருமாள் என்பவர் தொடர்ந்து ஆகாஷை சாதி ரீதியாக திட்டியதாகவும், அதேபோல் மாணவர்களுக்கு மத்தியில் உடைகளை கலைத்து துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த ஆகாஷ் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். 

தற்போது வரை காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆகாஷின் தாயார் மாரியம்மாள் தனது மகனின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேபோல் மீண்டும் எந்த ஒரு மாணவனுக்கும் ஜாதி ரீதியான பிரச்சனைகள் எழுந்துவிடக்கூடாது. ஆகவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி