திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 06-02-2026 அன்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பிரதீப் அறிவுறுத்தலின்படி, காவலர்களுக்கான வழக்கு புலன் விசாரணை பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை கலந்து கொண்டனர். திண்டுக்கல் நகர் உட்கோட்ட மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.