அதில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாரத்தைச் சேர்ந்த கண்ணகி சுயஉதவிக்குழு, குஜிலியம்பாறை வட்டாரத்தைச் சேர்ந்த பாரதமாதா குழு, திண்டுக்கல் மாநகராட்சியைச் சேர்ந்த அட்சயா மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் சந்தியா மகளிர் சுயஉதவிக்குழு என 4 குழுவினர் மணிமேகலை விருதுகள் மற்றும் தலா ரூ. 1. 00 இலட்சம் பரிசுத்தொகை பெற்றனர்.
இந்த சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி இன்று(03. 10. 2024) நேரில் சந்தித்து விருது மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு. சதீஸ்பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.