திண்டுக்கல்: இரவோடு இரவாக போடப்பட்ட தரமற்ற தார் சாலை

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் பாவா நகரில் போடப்பட்ட தரம் அற்ற தார் சாலையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக அமைக்கப்பட்ட இந்த சாலை, வாகனங்கள் சென்றாலே குழிகள் விழுந்து பயனற்று போனது. இதனால் அரசு பணம் வீணானதாகவும், தரமற்ற சாலையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரமான சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி