திண்டுக்கல்: பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த தாண்டிக்குடி பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு, தங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றி அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளார். மனுக்களைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி