இதையடுத்து, திண்டுக்கல் தாலுகா போலீஸாா், மேற்கு வட்டாட்சியா் வில்சன் தலைமையிலான வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தச் சிலைகளை மீட்டு, மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று வைப்பறையில் வைத்தனா்.
இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.