நிலக்கோட்டை: 42 பவுன் தங்க நகை கொள்ளை.. வாலிபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் வீட்டில் பட்டப்பகலில் 42 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றார். இது தொடர்பாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், ராஜபாளையத்தைச் சேர்ந்த மணிசங்கர் என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 42 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திங்கட்கிழமை (16-ம் தேதி) நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி