இதன் காரணமாக கண்ணன் வீட்டருகே அதே பகுதியில் மேலும் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் கொண்டு வீசிய இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்த போது கத்தியால் தன்னைத்தானே வெட்டிக்கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசிய பழைய வத்தலகுண்டு, கலைஞர் காலனியை சேர்ந்த மணிபாண்டி (26) என்பவரை கைது செய்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வந்த மணிபாண்டியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.