நிலக்கோட்டை அருகே குழாய் உடைப்பால் குடிநீர் வீண்

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பேரணை வைகை ஆற்றிலிருந்து உறை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, ராட்சச குழாய்கள் மூலம் திண்டுக்கல், சின்னாளபட்டி, வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ராட்சச குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் சீறிப்பாய்ந்தது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வெளியேறிய தண்ணீரால் அப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி